கூடலூரில் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி
கூடலூரில் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி
கூடலூர்
கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
பயிற்சிக்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் செயலாளர் ரமேஷ் வாழ்த்துரை வழங்கினார். கூடலூர் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஐயப்பன் பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார். இந்திய தர கட்டுப்பாட்டு அமைவன கோவை மண்டல தர கட்டுமான உதவி இயக்குநர் தாருரு அகில் பேசினார். தொடர்ந்து பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூடலூர், பந்தலூர் பகுதிகளை சேர்ந்த அரசு தனியார் அரசு உதவி பெறும் பள்ளி இடைச் சேர்ந்த ஆசிரியர்கள் 80 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக ஊட்டியில் இன்று (வியாழக்கிழமை) ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடக்கிறது.