குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு


குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு
x

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் குழந்தை கல்வி மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி புதிய பஸ் நிலையத்தில் ஆர்.டி.ஓ. சேக்மன்சூர் தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் மற்றும் குழந்தைகளின் கல்வி குறித்து விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி விழிப்புணர்வு மேற்கொண்டார். இதில் ராமநாதபுரம் தாசில்தார் முருகேசன், நாந்தி பவுண்டேசன் நிறுவன திட்ட அலுவலர் சகாயராணி, பயிற்சியாளர்கள் மகிமை, சந்தோஷ், குளோதிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story