போலீஸ் துறையின் செயல்பாடுகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு


போலீஸ் துறையின் செயல்பாடுகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 19 Nov 2022 4:38 PM GMT (Updated: 20 Nov 2022 5:31 PM GMT)

போலீஸ் துறையின் செயல்பாடுகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தேனி

கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு போலீஸ் துறையின் செயல்பாடுகள் குறித்து இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது போலீஸ் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் அறை, சப்-இன்ஸ்பெக்டர் அறை, பதிவேடுகள் வைப்பறை, நிலைய எழுத்தர் அறை, கைதிகள் அறை, கிடங்கு அறை, கணினி அறை, ஓய்வறை, ஆயுதங்கள் அறை உள்ளிட்டவை மாணவ-மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது.

அத்துடன் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சாலை விதிகளை பின்பற்றும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா விளக்கம் அளித்தார். மேலும் அவர், சமூகத்தில் நடக்கும் குற்றச்சம்பவங்கள், குழந்தை திருமணம் குறித்து போலீசாருக்கு தயக்கம் இல்லாமல் தகவல் தரலாம் என்றார். பின்னர் ஒவ்வொரு மாணவ-மாணவிகளையும், இன்ஸ்பெக்டர் நாற்காலியில் அமர வைத்து மாணவர்கள் நல்ல முறையில் படித்து அரசு அதிகாரிகளாக வர வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story