தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு


தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு
x

வெள்ளகோவில்,குண்டடம்,காங்கயத்தில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருப்பூர்

வெள்ளகோவில்,குண்டடம்,காங்கயத்தில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

வெள்ளகோவில்

வெள்ளகோவில் நகராட்சி சார்பில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தின் கீழ் வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட காமராஜபுரம், எல்.கே.சி.நகர் ஆகிய பகுதிகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவது குறித்து செயல்முறை விழிப்புணர்வு நடத்தப்பட்டது. அப்போது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்படி பொதுமக்கள் தங்களது இல்லங்களில் தினசரி சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து தங்களது வீடுகளுக்கு வரும் நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டனர்.

இதில் நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன்குமார், சுகாதார ஆய்வாளர் எஸ்.சரவணன், நகர் மன்ற உறுப்பினர்கள் விஜயலட்சுமி, முத்துலட்சுமி மற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

குண்டடம்-காங்கயம்

குண்டடம் ருத்ராவதி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ருத்ராவதி பேரூராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் மீனா கவுரி முன்னிலை வகித்தார். இதில் பேரூராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கயம் நகராட்சி சார்பில் நேற்று காலை நகரின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் என் குப்பை என் பொறுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காங்கயம் நகர பஸ் நிலைய வளாகத்தில் சுகாதார உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காங்கயம் நகரம், 5-வது வார்டு பஜனை மட வீதி, சவுண்டம்மன் கோவில் வீதிகளில் வீடு, வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியும், வீட்டுகுப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து கொடுப்பது குறித்த விளக்கங்களுடன் கூடிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மேலும் உரக்கிடங்கு வளம் மீட்டு மையத்தில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் காங்கயம் நகராட்சி மற்றும் துளிகள் அமைப்பினருடன் இணைந்து 101 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற துணை தலைவர் ஆர்.கமலவேணி, நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன், நகராட்சி பொறியாளர் எம்.திலீபன், சுகாதார ஆய்வாளர் எம்.செல்வராஜ், நகர் மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story