நாமக்கல்லில் 4 இறைச்சி கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபாராதம்


நாமக்கல்லில் 4 இறைச்சி கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபாராதம்
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 17 Jun 2023 10:20 AM GMT)

நாமக்கல்லில் 4 இறைச்சி கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபாராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல்

நாமக்கல் நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. அப்போது சேந்தமங்கலம் ரோட்டில், மழைநீர் வடிகால்களில் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றது. இதனிடையே மழைநீர் வடிகால்களில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதால் மழைக்காலங்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்படுவதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் தலைமையில், நகராட்சி பொறியாளர் சுகுமார், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி மற்றும் துப்புரவு ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது மழைநீர் வடிகாலில் மீன் கொண்டு வரும் தெர்மாகோல் பெட்டிகள் மற்றும் கோழி கழிவுகள் இருந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் சேந்தமங்கலம் ரோட்டில் உள்ள மீன் கடை மற்றும் கோழிக்கடைகளில் இருந்து கழிவுகளை கொட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 4 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் கழிவுகளை மழைநீர் வடிகால்களில் கொட்டக்கூடாது என்றும், மீறினால் கடை மூடி சீல் வைக்கப்படும் எனவும் நகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.


Next Story