உடன்குடி சீர்காட்சி அய்யா நாராயணசுவாமிதர்மபதி நிழல்தாங்கலில் பால்முறை திருவிழா
உடன்குடி சீர்காட்சி அய்யா நாராயணசுவாமி தர்மபதி நிழல்தாங்கலில் பால்முறை திருவிழா தொடங்கியது.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி அருகே சீர்காட்சி அய்யா நாராயணசுவாமி தர்மபதி நிழல் தாங்கலில் ஆடி மாத பால் முறை திருவிழா நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடந்து அய்யா சப்பரத்தில் பதியை சுற்றி வலம் வந்து அருள்பாலித்தார். இதில் சுற்றுபுற பகுதியில் இருந்து ஏராளமான அன்பு கொடி மக்கள் கலந்து கொண்டனர். வருகிற ஆக.13-ந் தேதி வரை தினமும் காலை 6மணி, மதியம் 12மணி, இரவு 7 மணிக்கு பணிவிடை உகப்படிப்பு, உச்சி படிப்பு நடக்கிறது. வரும் ஆக.11-ந் தேதி இரவு 10 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் வீதி பவனியும், வரும் ஆக.12-ந்தேதி இரவு 10 மணிக்கு சந்தன குடம் பவனியும், வரும் ஆக.13-ந்தேதி இரவு 10 மணிக்கு அய்யா இந்திரவாகனத்தில் தெரு பவனி நடக்கிறது.
Related Tags :
Next Story