அய்யா வைகுண்டர் பதியில் திருவிழா


அய்யா வைகுண்டர் பதியில் திருவிழா
x

பணகுடி அருகே அய்யா வைகுண்டர் பதியில் திருவிழா நடந்தது.

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடியை அடுத்த ரோஸ்மியாபுரம் அய்யா வைகுண்டர் பதியில் ஆனி திருவிழா 4 நாட்கள் நடந்தது. முதல் நாள் மாலை அய்யாவுக்கு பணிவிடை மற்றும் உகப்படிப்பு, அதன் பின்னர் அனுமன் நதியிலிருந்து புதிய கருட வாகனத்தில் அய்யா ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடந்தது. 2-வது நாள் மாலை அய்யாவுக்கு பால் முறை பணிவிடை நிகழ்ச்சியும், இரவு அன்ன தர்மமும் நடந்தது. 3-வது நாள் காலை சிற்றுண்டி தர்மம், மதியம் அய்யாவுக்கு பணிவிடை, மாலை உகப்படிப்பு மற்றும் அன்னதர்மம் நடைபெற்றது. 4-ம் நாள் காலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடைகளும் இரவு அய்யா பூ வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story