அய்யலூர் பேரூராட்சி கூட்டம்


அய்யலூர் பேரூராட்சி கூட்டம்
x
தினத்தந்தி 29 Aug 2023 1:30 AM IST (Updated: 29 Aug 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

அய்யலூர் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் கருப்பன் தலைமையில் பேரூராட்சி கூட்டம் நடந்தது.

திண்டுக்கல்

அய்யலூர் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் கருப்பன் தலைமையில் பேரூராட்சி கூட்டம் நடந்தது. செயல்அலுவலர் பாண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். இதில் அய்யலூர் பேரூராட்சிக்குட்பட்ட கணவாய்பட்டி சாலை முதல் குள்ளமநாயக்கர் களம் வரை தார்சாலை அமைத்தல், அப்பிநாயக்கன்பட்டி முதல் பாறைப்பட்டி மற்றும் பாறைப்பட்டி முதல் அய்யலூர் பேரூராட்சி எல்லை வரை தார்சாலை அமைத்தல், சக்தி முத்துமாரியம்மன் கோவில் மெயின் ரோடு தார்சாலை அமைத்தல், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 2 மின்கலன் வாகனம் வாங்குதல், மணியக்காரன்பட்டியில் புதிய சுகாதார வளாகம் அமைக்க மதிப்பீடு பெறுதல் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் முடிவில் இளநிலை உதவியாளர் அல்லிமுத்து நன்றி கூறினார்.

1 More update

Next Story