அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா


அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா
x
தினத்தந்தி 26 Sep 2023 6:45 PM GMT (Updated: 26 Sep 2023 6:45 PM GMT)

அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே இலந்தைகுளம் கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத பொங்கல் விழாவையொட்டி 2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. இதில் பேரையூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் இலந்தைகுளம் வரை அய்யனார் வேட்டைநாய் தவழும் பிள்ளை உள்ளிட்ட தெய்வங்களை தலைச்சுமையாக சுமந்து கொண்டு சேர்த்தனர்.

திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டுடன் திருவிழா தொடங்கியது. நாள்தோறும் அய்யனாருக்கு சிறப்பு பூஜை அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. விழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் காலையில் காளியம்மன் கோவில் முன்பாக பெண்கள் பொங்கல் வைத்தும், அய்யனார் பரிவார காவல் தேவதைகளுக்கு அலங்காரம் செய்தும் சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story