அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள். இதனால் சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சித்தாபுதூர்
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள். இதனால் சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அய்யப்பன் கோவில்
கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கார்த்திகை முதல் நாளான நேற்று கோவில் நடை திறக்கப்பட்டது.
இதையொட்டி அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலை சென்று அய்யப்பனை தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகை யில் கார்த்திகை மாதம் முதல் நாளான கோவை சித்தாபுதூரில் உள்ள அய்யப்பன் கோவிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.
மாலை அணிந்தனர்
புனிதநீராடி வந்த பக்தர்கள் குருசாமியின் கைகளால் மாலை அணிந்து கொண்டு விரதம் தொடங்கினார்கள். பக்தர்கள் குடும்பத்துடன் வந்து இருந்ததால் சித்தாபுதூர் கோவிலில் கூட்டம் அலைமோதியது.
கோவிலில் சரண கோஷம் எழுப்பப்பட்டது. இதையொட்டி கோவிலில் அய்யப்பனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இது போல் கோவையில் உள்ள அய்யப்பன் கோவில்களில் பக்தர்கள் குருசாமி கையால் மாலை அணிந்து கொண்டனர்.