அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை பயணம்


அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை பயணம்
x

அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை பயணம் மேற்கொண்டனர்.

திருச்சி

சமயபுரம்:

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலியில் இருந்து அய்யப்ப பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு அய்யப்பன் கோவிலுக்கு சென்று வருகின்றனர். அதேபோல், இந்த ஆண்டும் கடந்த வாரம் அய்யப்பன் கோவிலுக்கு செல்ல மாலை அணிந்த பக்தர்கள் நேற்று திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டப விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். அதைத்தொடர்ந்து வசந்த மண்டபத்தில் குருசாமி சுப்பிரமணி என்பவர் இருமுடி கட்டி 45-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பஸ்சில் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர்.


Next Story