வால்பாறையில் அய்யப்பன் கோவில் திருவிழா கொடியேற்றுத்துடன் தொடக்கம்

வால்பாறையில் அய்யப்பன் கோவில் திருவிழா கொடியேற்றுத்துடன் தொடக்கம்
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் அய்யப்பன் கோவில் திருவிழா கொடியேற்றுத்துடன் தொடக்கம்

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை வாழைத் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அய்யப்பசுவாமி கோவில் 63-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு மஹா தீபாராதனை நடத்தி திருவிழா கொடியேற்றி வைக்கப்பட்டது. வருகிற நாட்களில் தினந்தோறும் கணபதி ஹோமம், உஷபூஜை, நவகாபிஷேகம், தீபாராதனை, சீவேலி பூஜை நடைபெறுகிறது. சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் ஒவ்வொரு நாளும் கோவிலைச் சுற்றி அய்யப்ப சுவாமியின் தேர் பவனி நடைபெறுகிறது. விழாக் குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Next Story