அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்


அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்
x

அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

திருமயம் அருகே நற்சாந்துபட்டியில் அய்யப்பன் கோவில் உள்ளது. கோவிலில் தேவி, கணபதி, நாகதேவி, நவக்கிரகம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையடுத்து கோவில் முன்பாக யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 6-ந் தேதி ஆச்சார்யா வர்ணம் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து வாஸ்து ஹோமம், வாஸ்து பூஜை, கலச பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில் கலச பூஜை, உச்ச பூஜை, பகவதி சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று பலிகல் பூஜை, அத்தாழ பூஜை ஆகியவை நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதையடுத்து யாகசாலையில் புனித நீர் நிரப்பி வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களை மேள தாளம், வாணவேடிக்கைகள் முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் அய்யப்பன் கோவில் மூலஸ்தான விமான கலசம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களில் கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திருமயம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story