பி.ஏ.பி. அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


பி.ஏ.பி. அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 19 July 2023 12:15 AM IST (Updated: 19 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பி.ஏ.பி. அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கோயம்புத்தூர்


பொள்ளாச்சி


திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை உள்ளது. இந்த அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதை தவிர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மூலம் நீர்வரத்து உள்ளது. இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் இருந்து பாசனத்திற்கு 4 மண்டலங்களாக பிரித்து பி.ஏ.பி. பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 4-ம் மண்டல பாசனத்திற்கு 10 சுற்று தண்ணீர் வழங்க கோரி பொள்ளாச்சி பி.ஏ.பி. அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உடன்பாடு ஏற்படாததால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.



Next Story