பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீர் திருட்டு


பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீர் திருட்டு
x
தினத்தந்தி 18 Aug 2023 1:45 AM IST (Updated: 18 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீர் திருட்டு நடப்பதாக பொள்ளாச்சியில் நடந்த முறையீட்டுக்குழு கூட்டத்தில் சப்-கலெக்டரிடம், விவசாயிகள் புகார் கூறினர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீர் திருட்டு நடப்பதாக பொள்ளாச்சியில் நடந்த முறையீட்டுக்குழு கூட்டத்தில் சப்-கலெக்டரிடம், விவசாயிகள் புகார் கூறினர்.

முறையீட்டுக்குழு கூட்டம்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-

தென்னை மரத்தில் வேர் வாடல் நோய் தாக்குலை கட்டுப்படுத்த வேண்டும். அரசின் திட்டங்கள் குறித்தும், நோய் மேலாண்மை குறித்தும் பொள்ளாச்சி பகுதி வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தண்ணீர் திருட்டு

குளப்பத்துக்குளத்தில் உள்ள கருவேலமரங்களை அகற்ற வேண்டும். ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து குளத்தை நிரப்ப வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.2,800 வழங்க வேண்டும். பி.ஏ.பி. கால்வாய்களை 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு தூர்வார வேண்டும். மதகை உடைத்து தண்ணீர் திருடும் நபர்களின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். மேலும் விவசாயிகளுடன், அதிகாரிகளும் இணைந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். குளப்பத்துக்குளம் பாசன சங்கத்திற்கு வாக்காளர் பட்டியல் தயார் செய்து, விரைவில் தேர்தல் நடத்த வேண்டும். வேட்டைக்காரன்புதூர் கால்வாய் சீரமைப்பு பணிகளை வேகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நடவடிக்கை

கூட்டத்தில் சப்-கலெக்டர் பிரியங்கா பேசும்போது, விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குளப்பத்துக்குளத்திற்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும். வேளாண், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அரசின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விவசாயிகள் கொடுக்கும் மனுக்களுக்கு அந்தந்த துறை அதிகாரிகள் உரிய பதில் கொடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரசகுமார், தாசில்தார் ரேணுகா தேவி, திருமூர்த்தி திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், ஆழியாறு திட்டக்குழு தலைவர் செந்தில் மற்றும் விவசாயிகள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story