பி.ஏ.பி. கால்வாயில் இருந்து கோவில்பாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி


பி.ஏ.பி. கால்வாயில் இருந்து கோவில்பாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-11T00:15:44+05:30)

கோவில்பாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு 4000 ஏக்கர் பாசன வசதி பெறும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோயம்புத்தூர்

நெகமம்

கோவில்பாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு 4000 ஏக்கர் பாசன வசதி பெறும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

4 ஆயிரம் ஏக்கர் பாசனம்

நெகமம் அருகே கோவில்பாளையம் கிளை வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் தேவணாம்பாளையம், வகுத்தம்பாளையம், கப்பளாங்கரை, குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம்புதூர், கக்கடவு, காணியாலாம் பாளையம், வலசுப்பாளையம், முள்ளுப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள 4000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்தநிைலயில் விவசாயிகளின் தொடர் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று பி.ஏ.பி. கால்வாயில் இருந்து கோவில்பாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

நிலத்தடி நீர்மட்டம் உயரும்

இதுகுறித்து கோவில்பாளையம் விவசாயிகள் கூறியதாவது:- கடந்த சில ஆண்டுகளாக மழை தேவையான அளவு பெய்யாததால் தென்னை மரங்கள் காய்ந்து கருகியது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. இதனால் கருகிய தென்னை மரங்கள் துளிர்விட்டு, வளர்ந்து காய்ப்புத்திறனை தொடங்கியது. மேலும் விவசாய நிலங்களில் விவசாயிகள் உழவு செய்து கம்பு, சோளம், தக்காளி, வெண்டைக்காய், கத்தரி, வாழை, பொறியல் தட்டை, பச்சை மிளகாய், உள்பட பல்வேறு வகையானவை சாகுபடி செய்து இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் பி.ஏ.பி. மெயின் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று கோவில்பாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் மழை பெய்தால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மழை பெய்யாத நிலையில் தற்போது பி.ஏ.பி. கால்வாயில் இருந்து தண்ணீர் வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story