பாபநாசம் அணை நீர்மட்டம் 71 அடியை எட்டியது


பாபநாசம் அணை நீர்மட்டம் 71 அடியை எட்டியது
x

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் 71 அடியை எட்டியது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் 71 அடியை எட்டியது.

பாபநாசம் அணை

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அணைகளில் ஒன்றாக பாபநாசம் அணை திகழ்கிறது. 143 அடி முழு கொள்ளளவு கொண்ட இந்த அணை தென் மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. கடந்த மாதம் வரை போதிய மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

71 அடியை எட்டியது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்தும் பரவலாக உள்ளது. கடந்த 21-ந் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 64.5 அடியாக இருந்தது.

அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால் நேற்றைய நிலவரப்படி 71 அடியை எட்டியது. மேலும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 697.69 கன அடியாகவும், வெளியேற்றம் 804.75 கன அடியாகவும் உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதால் அணையின் நீர்மட்டம் இன்னும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Next Story