கைக்குழந்தையுடன் வந்து வாலிபர் கலெக்டரிடம் மனு


கைக்குழந்தையுடன் வந்து வாலிபர் கலெக்டரிடம் மனு
x
திருப்பூர்


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மடத்துக்குளம் காரத்தொழுவு பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி (வயது 25) என்பவர் தனது 1 மாத கைக்குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறேன். எனது மனைவி சந்தியா (22). கர்ப்பமாக இருந்ததால் பிரசவத்துக்காக கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி உடுமலை அரசு மருத்துமவனைக்கு அழைத்து சென்றேன். அன்று இரவு எனது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. எனது மனைவிக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டதாக டாக்டர்கள் கூறினார்கள். பின்னர் எனது மனைவி இறந்து விட்டார். சிகிச்சை குறித்து கேட்டபோது முறையாக பதில் அளிக்காமல் மிகவும் கொச்சைப்படுத்தி மருத்துவ ஊழியர்கள் பேசினார்கள். தவறான சிகிச்சையால் எனது மனைவி இறந்து விட்டார். இதற்கு காரணமான டாக்டர் மற்றும் கொச்சைப்படுத்தி பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு சிரமப்படுகிறேன். எனது மனைவி இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு வழங்கி, என்னையும், எனது பெண் குழந்தையையும் வாழ வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.


Next Story