ரூ.4 கோடியில் பொக்லைன் எந்திரங்கள்


ரூ.4 கோடியில் பொக்லைன் எந்திரங்கள்
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சிக்கு ரூ.4 கோடியில் பொக்லைன் எந்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளன.

கோயம்புத்தூர்


கோவை


கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. மாநகரில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் உள்ளன. இதுதவிர குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் உள்ளன. அதில் அடைப்புகள் ஏற்பட்டால் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சீரமைக்கப்படுகின்றன.


கோவையில் குறுகிய தெருக்கள், வீதிகளில் புதர்களை அகற்றவும், கால்வாய்களில் அடைப்புகளை சீரமைக்கவும் சிறிய ரக பொக்லைன் எந்திரங்கள் வாங்க மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து மாநகராட்சிக்கு ஒரு பெரிய பொக்லைன் எந்திரங்கள் உள்பட 17 எந்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளன.


இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறுகையில், கோவை மாநகராட்சியின் பயன்பாட்டிற்காக ரூ.4 கோடியில் ஒரு ராட்சத பொக்லைன் மற்றும் 10 பொக்லைன் எந்திரம், 6 பாப்காட் (சிறிய மண் அள்ளும் எந்திரம்) வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளது.

பெரிய பொக்லைன் எந்திரங்கள் செல்ல முடியாத வீதிகளில் பாப்காட் வாகனங்கள் மூலம் புதர்களை எளிதாக அகற்ற முடியும். மேலும் கால்வாய் அடைப்புகளை சரி செய்ய முடியும் என்றார்.



Next Story