மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பொக்லைன் ஆபரேட்டர் சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பொக்லைன் ஆபரேட்டர் சாவு
x

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பொக்லைன் ஆபரேட்டர் இறந்தார்.

புதுக்கோட்டை

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள மலையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி (வயது 40). இவர் தஞ்சாவூரில் தங்கியிருந்து பொக்லைன் எந்திர ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஆண்டிச்சாமி கடந்த 18-ந் தேதி காலை தஞ்சாவூரில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு செல்வதற்காக புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது தஞ்சாவூர் ரிங் ரோட்டில் திருச்சி-புதுக்கோட்டை சாலையை கடந்து மதுரை செல்லும் சாலையில் செல்வதற்காக கட்டி முடிக்கப்படாமல் உள்ள மேம்பாலத்தில் ஏற முயன்றுள்ளார். அப்போது அங்கு இருந்த தடுப்புக்கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆண்டிச்சாமி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த ஆண்டிச்சாமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆண்டிச்சாமி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story