பாகற்காய் விலை வீழ்ச்சி
திருப்பூர்
திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் மொத்த மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை சமீப காலமாக இறங்குமுகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று அவினாசி, சேவூர், பல்லடம், அவினாசிபாளையம் உள்ளிட்ட திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 20 கிலோ எடை கொண்ட பாகற்காய் மூட்டை சுமார் ஆயிரத்திற்கும் மேல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. வரத்து அதிகரிப்பு காரணமாக பாகற்காய் விலை அடியோடு சரிந்தது.
கடந்த வாரம் ஒரு மூட்டை பாகற்காய் ரூ.350 முதல் ரூ.400 வரைக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒரு மூட்டை ரூ.250 முதல் ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு மூட்டை ரூ.500 வரைக்கும் விற்பனையானால் தான் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். தற்போது விலை மிகவும் மலிவாக இருப்பதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Next Story