பேக்கரி உரிமையாளர் தற்கொலை


பேக்கரி உரிமையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 7 July 2023 2:30 AM IST (Updated: 7 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே கடன் தொல்லையால் பேக்கரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே கடன் தொல்லையால் பேக்கரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

கடன் தொல்லை

பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூரை சேர்ந்தவர் காணியாளன்(வயது 42). இவர் தனது வீட்டின் அருகில் பேக்கரி நடத்தி வந்தார்.இந்த நிலையில் பேக்கரி கடையை தொடர்ந்து நடத்துவதற்கு தெரிந்த நபர்கள் மற்றும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் பேக்கரியில் போதிய வருமானம் இல்லாததால் கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை. இதனால் கடன் தொல்லை அதிகரித்து வந்தது. மேலும் கடனை திரும்ப கொடுக்க முடியவில்லையே என்று அவர் புலம்பி வந்ததாக தெரிகிறது.

தற்கொலை

இந்த நிலையில் காணியாளன் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். பின்னர் நேற்று அதிகாலையில் உறவினர்கள் எழுந்து பார்த்தபோது, பேக்கரியில் அவர் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே காணியாளன் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story