பேக்கரி கடையில் திருட்டு
பேக்கரி கடையில் திருட்டு
விழுப்புரம்
திண்டிவனம்:
திண்டிவனம் பாரதி வீதியில் சத்தீஷ் பேக்கரி கடை உள்ளது. இன்று காலை இந்த பேக்கரியின் பூட்டு உடைக்கப்பட்டு, ஷட்டர் திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.2 ஆயிரத்தை காணவில்லை. இதனை நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றனர். 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டமுள்ள பாரதி வீதியில் பேக்கரி கடையில் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story