பாலாபிஷேகம்


பாலாபிஷேகம்
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-02-01T00:15:51+05:30)

சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாலாபிஷேகம் நடந்தது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரியில் கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிவகிருத்திகை தினத்தை முன்னிட்டு பால்காவடி மூலம் பால் எடுத்துச் சென்று மூலவருக்கு பால் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் சிவ கிருத்திகையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பால் காவடி எடுத்து சுவாமிக்கு பாலாபிஷேகம் நடத்தி வருகின்றனர். இதேபோல் இந்த ஆண்டு அபிஷேகம் நடந்தது. இதனைத்தொடர்ந்து தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகிரி, வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.Next Story