யோக நரசிங்க பெருமாள் கோவில் திருப்பணிக்காக பாலாலய விழா
யோக நரசிங்க பெருமாள் கோவில் திருப்பணிக்காக பாலாலய விழா
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே மட்டியூர் என்று அழைக்கப்படும் எஸ்.வி. மங்கலத்தில் பழமை வாய்ந்த யோக நரசிங்கபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து கோவில் முன்பு உள்ள மண்டப சுவர் தூண் விழும் தருவாயில் உள்ளது.. இந்த கோயிலை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கோவிலை புதுப்பித்து திருப்பணிகள் செய்து கும்பாபிஷேக விழா நடத்த கிராமத்தார் முடிவு செய்தனர். அதன் தொடக்கமாக பாலாலய விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு யாக குண்டம் வளர்த்து யாக வேள்விகள் நடைபெற்றன. சிவாச்சாரியார்கள் கொண்ட குழுவினர் கோவில் முன்பு யாக வேள்விகள் நடத்தி பாலாலய விழா நடைபெற்றது. புனித நீரைக் கொண்டு மூலவர் யோக நரசிங்கபெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மகா தீபாராதணை காட்டப்பட்டது. திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு யோக நரசிங்க பெருமாள் அருள் பெற்று சென்றனர். பாலாலய விழா நடைபெற்றதை தொடர்ந்து விரைவில் திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெறும் என கிராமத்தார்கள் கூறினர்.