8 கோவில்களில் பாலாலய பூஜை
பழனியில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 8 கோவில்களில் பாலாலய பூஜை நடந்தது.
திண்டுக்கல்
பழனி முருகன் கோவிலின் உபகோவில்களான சண்முகநதி தூர்நாச்சிஅம்மன், வையாபுரி கரை பாதிரி விநாயகர் கோவில், பட்டத்து விநாயகர் கோவில் உள்பட 8 கோவில்களில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று பாலாலய பூஜை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு அனுமதி பெறுதல், விநாயகர் வழிபாடு, திருக்குடம் நிறுவுதல், நவகோள் வழிபாடு நடந்தது.
தொடர்ந்து பல்வேறு மூலிகைகள், கனிகள், கிழங்குகள் கொண்டு யாகம் நடைபெற்றது. பின்னர் கோபூஜை, நவகோள் வழிபாடு, கலசம் புறப்பாடு நடந்தது. அதையடுத்து புனிதநீர் தெளித்தல், திருவமுது படைத்தல், வாஸ்து பூஜை நடைபெற்று திருப்பணி தொடங்கியது. இந்த பூஜையில் கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.
Related Tags :
Next Story