விநாயகர் கோவிலில் பாலாலயம்


விநாயகர் கோவிலில் பாலாலயம்
x

கீழக்கடையம் விநாயகர் கோவிலில் பாலாயம் நடைபெற்றது.

தென்காசி

கடையம்:

கீழக்கடையம் உடையார் விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம் நடைபெற்றது. இந்த கோவிலில் வருகிற ஆனி மாதம் 4-ந் தேதி கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக பாபநாசத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், சுவாமிக்கு பல்வேறு பூஜைகள், தீபாராதனைகள் நடக்கிறது.

ஆனி மாதம் 5-ந் தேதி விமான கோபுர கும்பாபிஷேகம், உடையார் விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாலாயம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story