சீதளா மாரியம்மன் கோவிலில் பால்குட விழா
குத்தாலம் அருகே சீதளா மாரியம்மன் கோவிலில் பால்குட விழா நடந்தது.
மயிலாடுதுறை
குத்தாலம்:
குத்தாலம் அருகே மேலையூர் ஏரிமேட்டு தெருவில் சீதளா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 7-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை, பால்குட திருவிழா கடந்த 24-ந்் தேதி விநாயகர் வழிபாடு, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா நடந்தது. முன்னதாக திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை ஏரிமேட்டு தெரு, மேலையூர், தேரழுந்தூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story