ஐகோர்ட்டுக்கு மேல் டிரோன் பறக்க தடை- பதிவாளர் அறிக்கை

ஐகோர்ட்டுக்கு மேல் டிரோன் பறக்க தடை- பதிவாளர் அறிக்கை
x

ஐகோர்ட்டுக்கு மேல் டிரோன் கேமராக்களை பொதுமக்கள் பறக்க விடக்கூடாது என்றும், மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் நிர்வாகப் பதிவாளராக இருப்பவர் ஹரி. இவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு மேல் டிரோன் கேமராக்கள் பறக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.

ஐகோர்ட்டுக்கு மேல் டிரோன் கேமராக்களை பொதுமக்கள் பறக்க விடக்கூடாது என்றும், மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story