சிகரெட் லைட்டர்களை விற்க தடை


சிகரெட் லைட்டர்களை விற்க தடை
x

சிகரெட் லைட்டர்களை விற்க தடை

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

சென்னை முதன்மை செயலாளரும் தொழிலாளர் ஆணையருமான அதுல் ஆனந்த் உத்தரவின் பேரில் குமரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ. மணிகண்டபிரபு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழிலாளர் நல சட்டமுறை எடையளவு சட்டத்தின் படி ஒரு பொருள் விற்பனை செய்யப்படும் போது பொருளின் பெயர், தயாரிப்பாளர் முகவரி, சேர்க்கப்பட்டுள்ள பொருளின் அளவு, அதிகபட்ச விற்பனை விலை மற்றும் காலாவதி ஆகும் தேதி ஆகியவை அச்சிடப்பட வேண்டும். ஆனால் தற்போது சீனா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டர் சட்டபூர்வமாக இறக்குமதி செய்வதாக தெரியவில்லை. இதில் எந்தவித விவரமும் அச்சடிப்பது இல்லை. இவற்றை விற்பனை செய்வதால் சுமார் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் தீப்பெட்டி தொழில் நலிவடைந்து வருகிறது. ஆகவே, சட்டபூர்வமாக எந்த முத்திரையும் இல்லாமல் இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டர்களை கிராமம் மற்றும் நகர்புறங்களில் விற்பனை செய்வதை தடை செய்யும் படி அனைத்து கடை நிறுவனங்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story