ராமநாதபுரத்தில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை - காவல்துறை அறிவிப்பு


ராமநாதபுரத்தில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை - காவல்துறை அறிவிப்பு
x

ராமநாதபுரத்தில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோலை பாட்டில்களில் வழங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

தமிழ்நாட்டில் கோவை, சேலம், மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்பட பல மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த சம்பவங்களால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க், வன்முறை சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் வழங்க கூடாது என வலியுறுத்தினார்.

இந்த நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோலை பாட்டில்களில் வழங்க மாவட்ட காவல்துறை தடைவித்து உத்தரவிட்டுள்ளது.


Next Story