வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி


வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி
x

வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கரூர்

நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, கோம்புப்பாளையம், நத்தமேடு, திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நன்செய் புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பல்வேறு ரகமான வாழைகளை பயிரிட்டுள்ளனர். வாழைத்தார்கள் நன்கு விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு வாழைத்தார்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் வரத்து அதிகரிப்பால் விலை நேற்று வீழ்ச்சி அடைந்தது. அதன்படி பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.300-க்கும், ரஸ்தாளி ரூ.250-க்கும், பச்சநாடன் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி ரூ.300-க்கும், மொந்தன் ரூ.500-க்கும் விற்பனையானது.

1 More update

Related Tags :
Next Story