வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு
வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.
நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், ஓலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் வாழைகளை பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் வாழைத்தார்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி வாழைத்தார்ஏல மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.250-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.300-க்கும் மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.500-க்கும் விற்பனையானது. தற்போது நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.400-க்கும், ரஸ்தாளி ரூ.400-க்கும், பச்சைநாடன் ரூ.250-க்கும், கற்பூரவள்ளி ரூ.450-க்கும், மொந்தன் ரூ.600-க்கும் விற்பனையானது. வரத்துக்குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.