இலை கருகல் நோய் பாதித்த வாழைகளை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்


இலை கருகல் நோய் பாதித்த வாழைகளை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்
x

திருக்குறுங்குடி பகுதியில் இலை கருகல் நோய் பாதித்த வாழைகளை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

திருநெல்வேலி

திருக்குறுக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடவு செய்யப்பட்ட வாழைகள் இலை கருகல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் திருக்குறுங்குடியில் பாதிக்கப்பட்ட வாழைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நோயின் தாக்கம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''வாழைகளை நோய் தாக்கியது எப்படி என்பதை கண்டறிய வேண்டும். இதனை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக நிவாரணம் வழங்குவார்'' என்றார்.

அப்போது, தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பாலகிருஷ்ணன், களக்காடு உதவி இயக்குனர் சண்முகநாதன், தோட்டக்கலை அதிகாரி இசக்கிமுத்து, உதவி அலுவலர் கிளாரன்ஸ் ஜோன்ஸ், காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகர், கக்கன், செல்லப்பாண்டி, மாவட்ட பொதுச்செயலாளர் நம்பித்துரை, காங்கிரஸ் நிர்வாகி ஜார்ஜ் வில்சன், திருக்குறுங்குடி நகர தி.மு.க. செயலாளர் கசமுத்து, சுரேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியில் இருந்து களக்காடு போலீஸ் நிலையத்திற்கு 6 கண்காணிப்பு கேமராக்களை, களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சனிடம் வழங்கினார்.

சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமநாதன், அமலன் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அலெக்ஸ், ஜார்ஜ்வில்சன், வாகைதுரை, வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், வில்சன், துரைராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


1 More update

Next Story