ஆடி வெள்ளி விழாவையொட்டி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் பந்த கால் நடும் விழா


ஆடி வெள்ளி விழாவையொட்டி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் பந்த கால் நடும் விழா
x

ஆடி வெள்ளி விழாவையொட்டி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் பந்த கால் நடும் விழா நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆடி வெள்ளி விழாவையொட்டி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் பந்த கால் நடும் விழா நடந்தது.

ஆரணி காவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி வெள்ளி பெருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன்படி வருகிற 21-ந் தேதி வெள்ளிக்கிழமை ஆடி, முதல் வெள்ளி விழா நடக்கிறது. இதனையொட்டி கோட்டை வேம்புலி அம்மன் கோவில் அருகாமையில் விழா குழு தலைவர் ஜி.வி. கஜேந்திரன் தலைமையில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

அன்று கோவிலிலிருந்து கரகாட்டம், ஒயிலாட்டம், சாக்ஸ்போன், நாதஸ்வர இசைகயுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நூதன புஷ்பப்பல்லக்கு திருவீதி உலா நடக்கிறது. மறுநாள் கோவில் அருகாமையில் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் இசை அமைப்பாளர் தீனா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. விழா குழுவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பந்த கால் நட்டனர். முன்னதாக கோ பூஜையும் நடந்தது.


Next Story