வங்கி, ஏ.டி.எம். பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி


வங்கி, ஏ.டி.எம். பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
x

நாமக்கல் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் ஏ.டி.எம். பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்

வங்கியின் பூட்டு உடைப்பு

சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் அருகே புதுச்சத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று (இந்தியன் வங்கி) செயல்பட்டு வருகிறது. அதன் அருகே அந்த வங்கியின் ஏ.டி.எம். மையமும் இயங்கி வருகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் மர்மநபர்கள் சிலர் அந்த வங்கி அலுவலகம் மற்றும் ஏ.டி.எம். அறையின் பூட்டையும் உடைத்தனர். ஆனால் அவர்களால் வங்கி மற்றும் ஏ.டி.எம். அறையின் ஷட்டர்களை முழுமையாக திறக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

தகவல் அறிந்த நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் வங்கிக்கு சென்று விசாரணை நடத்தினர். அதனால் வங்கி மற்றும் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து அதிஷ்டவசமாக பணம் ஏதும் கொள்ளை போகவில்லை என போலீசார் தெரிவித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே அதே பகுதியில் உள்ள டைலர் கடை ஒன்றில் ரொக்கபணம் திருடு போனதாக கூறப்படுகிறது. அதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன நடமாட்டம் அதிகம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வங்கி பூட்டை உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story