பண்ணாரி அம்மன் கோவிலில் ரூ.1 கோடி உண்டியல் காணிக்கை


பண்ணாரி அம்மன் கோவிலில் ரூ.1 கோடி உண்டியல் காணிக்கை
x

பண்ணாரி அம்மன் கோவிலில் ரூ.1 கோடி உண்டியல் காணிக்கை

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கோவில் வளாகத்தில் 20 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.

காணிக்கை எண்ணும் பணி பண்ணாரி அம்மன் கோவில் செயல் அதிகாரி மேனகா, ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் பரம்பரை அறங்காவலர்கள், பக்தர்கள், வங்கி அலுவலர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டு காணிக்கைகளை எண்ணினர். இதில் காணிக்கையாக ரூ.1 கோடியே 6 லட்சத்து 93 ஆயிரத்து 602-ஐ பக்தர்கள் செலுத்தி இருந்தனர். மேலும் 760 கிராம் தங்கம், 792 கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது.

1 More update

Next Story