பார்கவுன்சில் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கேட்டுசேலத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
பார்கவுன்சில் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கேட்டு சேலத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்,
சேலம் உரிமைக்குரல் சட்ட உதவி மையம் சார்பில் சேலம் தொங்கும் பூங்கா அருகில் அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மைய ஒருங்கிணைப்பாளர் பகத்சிங் தலைமை தாங்கினார். விஜயகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள போலி வக்கீல்களை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் நிர்மல்ராஜ், சுப்பிரமணி, ஜனார்த்தனன் உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் மைய ஒருங்கிணைப்பாளர் பகத்சிங் கூறுகையில், அகில இந்திய பார் கவுன்சில் துணை தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும். இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் மற்றும் தமிழ்நாடு - புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். போலி வக்கீல்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.