கொட்டகையில் தீ; 11 ஆடுகள், 23 கோழிகள் செத்தன


கொட்டகையில் தீ; 11 ஆடுகள், 23 கோழிகள் செத்தன
x

கொட்டகையில் தீ; 11 ஆடுகள், 23 கோழிகள் செத்தன

திருச்சி

துறையூர் அருகே கலிங்கமுடையான்பட்டியைச் சேர்ந்தவர் சின்னையன் (வயது 47). இவர் அங்காயி கோவில் அருகே கொட்டகை அமைத்து ஆடு, மாடு, கோழிகள், நாய்கள், பூனைகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவில் இந்த கொட்டகையில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த விபத்தில் கொட்டகையில் அடைக்கப்பட்டு இருந்த 23 கோழிகள், 11 ஆடுகள், ஒரு மாடு, 4 பூனைகள், 2 நாய்கள் உயிரிழந்தன. தகவல் அறிந்த துறையூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை பரவவிடாமல் தடுத்து அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story