உயிரிழப்புகளை தடுக்க ஆழியாறு தடுப்பணையில் தடுப்புகள் அமைப்பு-போலீசார் நடவடிக்கை


உயிரிழப்புகளை தடுக்க ஆழியாறு தடுப்பணையில் தடுப்புகள் அமைப்பு-போலீசார் நடவடிக்கை
x

ஆழியாறு தடுப்பணையில் உயிரிழப்புகளை தடுக்க தடுப்புகள் அமைத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

ஆழியாறு தடுப்பணையில் உயிரிழப்புகளை தடுக்க தடுப்புகள் அமைத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

ஆழியாறு தடுப்பணை

பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை உள்ளது. அதன் அருகில் ஆழியாறு தடுப்பணை அமைந்துள்ளது. இந்தநிலையில், சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஆழியாறு தடுப்பணையில் குளிக்க பொதுப்பணித்துறை மற்றும் ஆழியார் போலீசார் தடை விதித்துள்ளனர். தடுப்பணையில், புதைமணல் மற்றும் ஆழமான சுழல் நிறைந்த பகுதி இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அத்தடையை மீறி பலர் அணையில் குளித்து மகிழ்வர். ஒரு சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில், தென்மேற்கு பருவமழை எதிரொலியாக தடுப்பணையில் தற்போது அதிகம் தண்ணீர் தேங்கி உள்ளது.

தடுப்புகள் அமைப்பு

இதில், சுற்றுலா பயணிகள் இறங்கி குளிக்கும் போது ஆபத்து ஏற்பட்டு உயிர் இழப்பு சம்பவம் நடந்து விடக்கூடாது என்ற நோக்கில் நேற்று ஆழியார் போலீசார் தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு தடுப்பு அமைப்பு (பேரிகார்டு,) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- ஆழியாறு தடுப்பணையில் உயிரிழப்பை தடுக்க ஆழியாறு போலீசார் தடுப்பு

நடவடிக்கையை பாராட்டுகிறோம். இருப்பினும், இப்பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு என்பது அணைபகுதியில் தடுப்பு வேலிகள் அமைத்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்த முடியும். இதற்காக கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை மூலம் விரைவில் தடுப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

---

Image1 File Name : 11960001.jpg

----

Reporter : G.SANKAR Location : Coimbatore - Pollachi - SULTHANPATTAI

1 More update

Next Story