தடுப்புச்சுவர்


தடுப்புச்சுவர்
x

கூத்தாநல்லூர் அருகே சாலையோரத்தில் இடிந்து விழுந்த தரைப்பால தடுப்புச்சுவரை புதிதாக கட்டித்தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே சாலையோரத்தில் இடிந்து விழுந்த தரைப்பால தடுப்புச்சுவரை புதிதாக கட்டித்தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

மூன்று பிரிவு சாலைகள்

கூத்தாநல்லூர் அருகே பாலக்குறிச்சி கிராமம் உள்ளது. இந்த பாலக்குறிச்சி பஸ் நிறுத்தத்தை மையமாக கொண்டு சேந்தங்குடி சாலை, ஊட்டியாணி சாலை, புள்ளமங்கலம் சாலை என மூன்று பிரிவு சாலைகள் உள்ளன. மூன்று பிரிவு சாலைகளுமே வளைவுகள் உள்ள இடத்தில் இருக்கும் நிலையில், அதில் சேந்தங்குடி செல்லும் சாலை முகப்பில் வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீரை பாலக்குறிச்சி, ராஜன்கட்டளை, திருநாட்டியத்தான்குடி, பூந்தோட்டம், பண்டார ஓடை போன்ற பகுதிகளில் உள்ள வயல்களுக்கு செல்லக்கூடிய வகையில் பாசன வாய்க்கால் செல்கிறது.

அடிக்கடி மண்சரிவு

இந்த பாசன வாய்க்கால் சாலையின் குறுக்கே செல்வதால் சாலையின் மேல்பகுதியில் தரைப்பாலம் கட்டப்பட்டு இரண்டு பக்கமும் தடுப்புச்சுவரும் கட்டப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலத்தின் இரண்டு பக்கமும் உள்ள தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்து விட்டது. இதனால் சாலையின் கரையோரத்தில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டது.

இதனால், ஆபத்தான வளைவில் ஏற்பட்ட பள்ளம், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் காணப்படுகிறது. ஆபத்தான மூன்று பிரிவு சாலை வளைவில் உள்ள இந்த பள்ளத்தால், எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து சென்று வருவதில் சிரமப்பட்டு வருகின்றனர்.

புதிதாக தடுப்புச்சுவர்

இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோ பள்ளத்தில் விழுந்து, வாகன ஓட்டிகள் சிலர் காயம் அடைந்தனர். அதனால் சேதமடைந்த தரைப்பால தடுப்புச்சுவர்கள் இடிந்த இடத்தில் ஏற்பட்ட பள்ளம் மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே இடிந்து விழுந்த தடுப்புச்சுவருக்கு பதிலாக புதிதாக தடுப்புச்சுவர்கள் கட்ட வேண்டும். இல்லையெனில் சேதமடைந்த தரைப்பாலத்தை அகற்றி விட்டு புதிதாக தடுப்புச்சுவர்களுடன் தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story