மதுக்கடைகள், மதுபான கூடங்கள் மூடப்படும்


மதுக்கடைகள், மதுபான கூடங்கள் மூடப்படும்
x
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் 16,26-ந்தேதிகளில் மதுக்கடைகள், மதுபான கூடங்கள் மூடப்படும் கலெக்டர் லலிதா உத்தரவு

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளையும் (திங்கட்கிழமை), வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்றும் மதுவிற்பனை இல்லாத நாளாக தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. எனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மதுபான சில்லறை விற்பனைக்கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டலில் இயங்கும் மதுபான கூடம் உள்பட அனைத்தும் 2 நாட்களுக்கு தற்காலிகமாக மூடிவைக்கப்பட வேண்டும். எனவே மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது எனவும், மதுபான போக்குவரத்து ஏதும் செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story