அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்:தாமரைக்குளம் பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்


அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்:தாமரைக்குளம் பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று தாமரைக்குளம் பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தேனி

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி கூட்டம் மன்ற அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஆளவந்தார், துணைத் தலைவர் மலர்கொடி சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பேருராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள், கழிவு நீர் வாய்க்கால், மின்விளக்குகள், சாலை வசதிகள் ஆகியவை செய்து தர வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தங்களது கோரிக்கைள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் கூறினார். கூட்டத்தில் பணி நியமனக்குழுத் தலைவர் பாலாமணி பழனிமுருகன் உள்பட கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story