சுருளி அருவியில் குளிக்க அனுமதி - வனத்துறை அறிவிப்பு


சுருளி அருவியில் குளிக்க அனுமதி - வனத்துறை அறிவிப்பு
x

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.

தேனி,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேனி மாவட்டம் கம்பம் அருகே அரிக்கொம்பன் காட்டு யானை நடமாட்டம் அதிகமாக இருந்ததால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரிக்கொம்பன் காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து நெல்லை மாவட்டம் களக்காடு அரை வனப்பகுதியில் விட்டனர்.

இதையடுத்து சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது. 10 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story