ஊராட்சிகளுக்கு பேட்டரியில் இயங்கும் வாகனங்கள்


ஊராட்சிகளுக்கு பேட்டரியில் இயங்கும் வாகனங்கள்
x
தினத்தந்தி 15 July 2023 2:14 AM IST (Updated: 15 July 2023 5:12 PM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்துவதற்காக தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரியில்இயங்கும் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேட்டரி வாகனங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், ஒரத்தநாடு ஒன்றியக்குழு தலைவர் பார்வதி சிவசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரி, ரகுநாதன், முள்ளூர்பட்டிக்காடு ஊராட்சி மன்ற தலைவர்் வெங்கடேஸ்வரன் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தி.மு.க பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story