மலேசியாவில் சிக்கி தவிக்கும் பட்டுக்கோட்டை வாலிபர்
மலேசியாவில் சிக்கி தவிக்கும் பட்டுக்கோட்டை வாலிபரை தாயகம் அழைத்து வர பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தொண்டிகுளம் சர்க்கார் தோப்பு கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்வம்-கனகாம்பாள். இவர்களது இளைய மகன் கார்த்திக் (வயது 24). இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன் மலேசியாவிற்கு ராமேசுவரம் பகுதியை சேர்ந்த ஏஜெண்டு மூலமாக வேலைக்கு சென்றுள்ளார். அங்கு 6 மாதங்களாக பணிபுரிந்து வந்த நிலையில், பணிச்சுமை அதிகமாக இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது வலிப்பு ஏற்பட்டு மயங்கி கீேழ விழுந்தார். இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வருகிறார். இதையடுத்து கார்த்திக் பெற்றோர் தனது மகனை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரையிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் மலேசியாவில் சிகிச்சை பெற்று வரும் கார்த்திக்கை தாயகம் அழைத்து வர மத்திய, மாநில அரசுகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.