வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்


வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்
x

அனைத்துத்துறை அலுவலர்களும் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் அறிவுரை கூறினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

அனைத்துத்துறை அலுவலர்களும் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் அறிவுரை கூறினார்.

ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 தாலுகாக்கள், 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள், 18 ஒன்றியங்கள் மற்றும் 860 கிராம ஊராட்சிகள் உள்ளன.

மேலும் சாத்தனூர் அணை, குப்பநத்தம் அணை, மிருகண்டா அணை, செண்பகத்தோப்பு அணை என 4 நீர்தேக்க அணைகளும், பொதுப் பணித் துறை நீர்வள ஆதாரத் துறையின் கட்டுப்பாட்டில் 697 பெரிய ஏரிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் 1253 சிறிய ஏரிகளும் உள்ளன.

தயார் நிலையில் இருக்க வேண்டும்

வருவாய்த் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, செய்யாறு சப்- கலெக்டர் அனாமிகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story