போட்டித் தேர்வுகளை எழுத தயாராக இருக்க வேண்டும்
போட்டித் தேர்வுகளை எழுத தயாராக இருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கல்வி அதிகாரி அறிவுறுத்தினார்.
வால்பாறை
போட்டித் தேர்வுகளை எழுத தயாராக இருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கல்வி அதிகாரி அறிவுறுத்தினார்.
கல்வி அதிகாரி ஆய்வு
வால்பாறையில் ரொட்டிக்கடை அரசு உயர்நிலைப்பள்ளியில் பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் கேசவக்குமார் ஆய்வு செய்தார். அவரிடம் பள்ளியில் உள்ள வசதிகள் குறித்து தலைமை ஆசிரியர் ராஜ்குமார் விளக்கினார். மேலும் பள்ளியின் மேற்கூரை சேதமடைந்து உள்ளதால் மழை காலத்தில் ஒழுகுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவர்கள் மத்தியில் மாவட்ட கல்வி அலுவலர் கேசவக்குமார் பேசியதாவது:-
பள்ளிக்கு தவறாமல் வர வேண்டும். அரசின் சார்பில் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளை யும் எழுதுவதற்கு மாணவ-மாணவிகள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.
போட்டித்தேர்வு
போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதன் மூலம் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வுகளையும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் எழுத வரவேண்டும். வால்பாறை போன்ற மலைப்பிரதேசத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பெற்றோர்கள் படிக்க வைக்கிறார்கள். அதை புரிந்து கொண்டு மாணவர்கள் நன்கு படித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து அவர், வால்பாறை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆய்வு செய்தார்.