சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ்கத்திப்பாராவில் இருந்து விமான நிலையம் வரை அழகுப்படுத்தும் பணி


சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ்கத்திப்பாராவில் இருந்து விமான நிலையம் வரை அழகுப்படுத்தும் பணி
x

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ்கத்திப்பாராவில் இருந்து விமான நிலையம் வரை அழகுப்படுத்தும் பணியை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.

சென்னை

சென்னை மாநகராட்சி சார்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கத்திபாராவில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரை ஜி.எஸ்.டி சாலை பகுதிகளை அழகுப்படுத்துவது பூங்கா அமைப்பது, வண்ண ஓவியங்கள் வரைவது மற்றும் கழிப்பிட வசதிகளை மேம்படுத்துவது போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு செய்தார். கத்திப்பாரா மேம்பால பகுதி, ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலைய பகுதி, மீனம்பாக்கம் ரெயில் நிலையம் போன்ற பகுதிகளை ஆய்வு செய்தார்.

அப்போது ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன், தென் சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் சிம்ரன்ஜித் சிங், மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரன், செயற்பொறியாளர் ராஜசேகர், ஜெ.நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story