அழகு முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா


அழகு முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா
x

அழகு முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடந்தது.

கரூர்

நங்கவரம் அருகே உள்ள குறிச்சி அம்பேத்கர் நகரில் பிரசித்தி பெற்ற அழகு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி கடந்த 4-ந்தேதி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து மேள, தாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து இரவு காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. நேற்று காலை பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கிடா வெட்டு பூஜை, சாமி வீதி உலா நடந்தது. தொடர்ந்து முத்துமாரியம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) குட்டி குடித்தல், கரகம் ஆற்றில் விடுதல், மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


Next Story